செவ்வாய், 26 மே, 2009

அப்போதும் இப்போதும்! க‌ருணாநிதி காமெடி!

மத்தியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு வைபவங்கள் அரங்கேறும் போதெல்லாம் தமிழகத்தின் பக்கம் பார்வை திரும்புவது வாடிக்கையாகிவிட்டது. 15வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு வந்து, ஆட்சியமைக்கும் அஸ்திவாரங்கள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த முக்கியமான வேளையில்வெளியில் இருந்து ஆதரவுஎன்று முறுக்கிக் கொண்டு நின்றது தி.மு.. ‘காங்கிரஸ் பார்முலா எங்களுக்கு உடன்படவில்லை.’ என்று சொல்லி வெளியில் இருந்து ஆதரவு என்கிற நிலை எடுத்திருக்கும் தி.மு.., கடந்த 2004 தேர்தலிலும் இதே பார்முலாவைதான் கையில் எடுத்தது. வெளியில் இருந்து ஆதரவு என்பதுதான் அந்த பார்முலா. அந்த ஃபிளாஷ்பேக்குள் போவதற்கு முன்பு ஒரு முன்னோட்டம்.1996ம் ஆண்டு தேர்தலில் இருந்துதான் தமிழ்நாட்டு கட்சிகளின்கைமத்தியில் ஓங்க ஆரம்பித்தன. தமிழகத்தில் .தி.மு..வை விட தி.மு.. அதை கெட்டியாக பிடித்துக் கொண்டது. 1996 தேர்தலில் தி.மு.. .மா.கா. கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்று, வேட்டி கட்டிய இரண்டு தமிழர்கள் (கருணாநிதி, மூப்பனார்) தேவகவுடா பிரதமர் ஆக காரணமாக இருந்தார்கள். அப்போது தமிழகத்திற்கு 9 மத்திய அமைச்சர்கள் கிடைத்தார்கள். அதன்பிறகு 98 தேர்தலில் வாஜ்பாய் பிரதமர் ஆக ஜெயலலிதா காரணமாக அமைந்தார். அப்போது குமார், தம்பிதுரை, தலித் எழில்மலை, பொன்னுசாமி, சேடப்பட்டி முத்தையா என மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு கிடைத்தார்கள். அதன்பிறகு 13 மாதத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. 1999 தேர்தலில் வாஜ்பாய் வென்று பிரதமர் ஆனார். அப்போது அந்த கூட்டணியில் தி.மு.. இடம்பெற்றிருந்தது. அந்த அமைச்சரவையிலும் தமிழகத்துக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு 2004ல் 13 அமைச்சர்கள். இப்போது எத்தனை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.இதன் மூலம் இரண்டு விஷயங்கள் மட்டும் தெளிவாக இருக்கிறது. 1996ல் இருந்து இடையில் 13 மாதங்கள் தவிர, இன்று வரையில் மத்திய அமைச்சரவையில் தி.மு.. பங்கெடுத்து வருவது ஒரு விஷயம் . தமக்கு வேண்டிய துறைகளை கேட்டு பெறுவதற்காகவெளியில் இருந்து ஆதரவுஎன்கிற சண்டித்தனத்தை தி.மு.. செய்வது இரண்டாவது காரணம். 2004 நடந்த கூத்துகள்தான் இப்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அப்போதும் இப்போதும் நடந்த விஷயங்கள் கிஞ்சித்தும் வேறுபாடு இல்லாமல் இருப்பதுதான் ஆச்சரிய ஒற்றுமை....அப்போது (2004) என்னதான் நடந்தது?"தேர்தலுக்குப் பின் அமையும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம்"
2004 ஏப்ரல் 24 திருச்சியில் இப்படி பேட்டி கொடுத்தார் கருணாநிதி. தேர்தல் முடிவதற்கு முன்பு இப்படி திருவாய் மலர்ந்த கருணாநிதிதான், மத்திய அமைச்சரவையிலும் தி.மு..வை அமரவைத்தார். ‘‘அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. தேவைப்படும்போது அதைக் கட்சியின் முன்வைப்பேன்.’’ என்று சொல்லிவிட்டு ‘‘தேர்தல் முடிந்த பிறகு கட்சியின் முடிவு காரணமாக அமைச்சரவையில் தி.மு.. இடம்பெறும்’’ என்று சொல்லி பல்டி அடித்தார்.''மத்திய அமைச்சரவையில் பொறுப்பு ஏற்கமாட்டோம்" 2004 மே 23ம் தேதி அதிரடியாக அறிக்கைவிட்டார் கருணாநிதி. இதன்பின்னால் நடந்த நாடகம் இதுதான்.தி.மு..வுக்கு எத்தனை அமைச்சர்கள் என்னென்ன துறைகள் எல்லாம் பேசி முடிவு செய்யப்பட்டு 2004 மே 23ம் தேதி மத்திய அமைச்சர்களின் பெயர்களும் இலாகாக்களையும் ராஷ்டபதி பவன் அறிவித்தது. அதன்பிறகுதான் கருணாநிதியிடமிருந்து இப்படியரு அறிக்கை வந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் தி.மு..வுக்கு அளிக்கப்படுவதாக உறுதி தரப்பட்ட இலாகாக்கள் பற்றி விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பிறகு தி.மு..வுக்கு என்ன என்ன துறைகள் என்பது பற்றி உறுதி மொழிக்கடிதத்தில் காங்கிரஸ் சார்பாக ஜனார்த்தன ரெட்டி கையெழுத்திட்டிருந்தார். ஆனால் அதற்கு மாறாக வேறு துறைகள் ஒதுக்கி அறிவிப்பு வந்தது. ‘‘இந்த குதர்க்கத்திற்கு யார் காரணகர்த்தா என்பது தெரிந்து இந்த பிழை திருத்தப்படும் வரை மத்திய அமைச்சரவையில் பொறுப்பு ஏற்பதில்லை’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டார் கருணாநிதி.அந்த அறிக்கை இதோ...


‘‘இன்று (நேற்று) இரவு மத்திய அமைச்சரவை இலாகாக்கள் பெயர்களும், அந்த இலாக்காக்களின் பொறுப்பை ஏற்பவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் தி.மு.. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்ட அந்த இலாகாக்கள் குறித்த உறுதி மொழிக்கடிதத்தில் காங்கிரஸ் சார்பாக ஜனார்த்தன ரெட்டி கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால், இன்று (நேற்று) இரவு டெல்லியிலிருந்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் அந்த உறுதிமொழி ஒப்பந்தத்திற்கு மாறாக இலாகாக்கள் மாறி வந்திருக்கிறது. இந்த குதர்க்கத்திற்கு யார் காரணகர்த்தா என்பது தெரிந்து இந்த பிழை திருத்தப்படும் வரை மத்திய அமைச்சரவையில் பொறுப்பு ஏற்பதில்லை என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.’’ இப்படி அறிக்கையில் சொல்லியிருந்தார் கருணாநிதி.அடுத்த நாள் (2004 மே 24) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கருனாநிதி. ‘‘கேட்ட இலாக்காக்கள் தரவில்லை. உயர்நிலை செயல் திட்டக்குழு கூடி முடிவெடுக்கப்படும்’’ என்று கொதித்தார். (இப்போது செயற்கு குழு. அப்போது உயர்நிலை செயல் திட்டக்குழு நல்ல காமெடிங்க)
அப்போது கருணாநிதி அளித்த பேட்டியை கோலன், செமி கோலன் என்று எதையும் நீக்காமல் அப்படியே தருகிறேன் (நூறு சதவீத சிரிப்புக்கு கேரண்டிங்க..)கேள்வி:- மத்திய அமைச்சரவையில் தி.மு.. பங்கேற்காது என்று கூறியிருக்கிறீர்கள். அந்த பிரச்சினை தீர்ந்துவிட்டதா?பதில்:- பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நாளைய தினம் தி.மு.கழகத்தினுடைய உயர்நிலை செயல் திட்டக்குழு கூடுகிறது. இதைப்பற்றி அந்த கூட்டத்தில் விவாதித்து உரிய முடிவெடுக்கப்படும்.கேள்வி:- இதற்கு யார் காரணமாக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?பதில்:- தெரியவில்லை.


கேள்வி: -மாற்றத்தைப் பற்றி உங்களுக்கு முன்பே தெரிவித்தார்களா?


பதில்:- தெரிவிக்கவில்லை.


கேள்வி:- இதுகுறித்து பிரதமர் உங்களிடம் பேசியதாக கூறப்படுகிறதே?


பதில்:- இன்று காலை 10 மணி அளிவில் பேசினார். இப்போது ஒத்துக்கொள்ளுங்கள். பத்து நாட்களில் சரி செய்கிறோம் என்றார். அது கஷ்டம் என்று சொன்னேன்.


கேள்வி:- விடப்பட்ட துறைகளை எதற்காக முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறீர்கள்?


பதில்:- தி.மு.கழகத்திற்கு தருவதாக ஒப்புக்கொண்ட துறைகள் இவை. மேலும் இந்த துறைகள் எல்லாம் முக்கியமானவைகளாகும். நிதித்துறையில் ரெவின்யூ பிரிவு ஏற்கனவே செஞ்சி ராமச்சந்திரன், குமார் போன்றவர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அது இப்போது பேசி முடித்து பழனி மாணிக்கத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதை அப்படியே எடுத்து விட்டார்கள். உள்துறையில் பணியாளர்கள் என்ற பிரிவும் முக்கியமான ஒன்றாகும். ..எஸ். அதிகாரிகள் எல்லாம் அந்தத் துறையின் கீழ்தான் வருவார்கள். அதையும் தருவதாக ஒப்புக்கொண்டு இப்போது தரவில்லை.


கேள்வி:- பிரதமரிடம் பேசிய போது இவற்றை எடுத்துக்கொண்டதற்கு காரணம் சொன்னாரா?


பதில்:- காரணம் எதுவும் அவர் சொல்லவில்லை. எப்படியோ தவறு ஏற்பட்டு விட்டது. அது சரி செய்யப்படும் என்றார்.


கேள்வி-: அமைகின்ற புதிய அரசாங்கத்தின் உறவை இந்த பிரச்சினை கெடுத்துவிடாதா?


பதில்:- இது ஒன்றும் உறவை கெடுத்துவிடாது.


கேள்வி: -இந்த சூழ்நிலை ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாதா?


பதில்:- நான் எப்போதும் நிர்ப்பந்தத்தை விரும்புகிறவன் அல்ல. யாரையும் நிர்ப்பந்திப்பவனும் அல்ல.


கேள்வி:- நீங்கள் ஏதாவது காலக்கெடு கொடுத்திருக்கிறீர்களா?


பதில்:- காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை. அப்படியெல்லாம் காலக்கெடு விதித்து, அச்சுறுத்துகிற பழக்கம் எனக்கும் கிடையாது. தி.மு.கழக முன்னணித் தலைவர்கள் யாருக்கும் கிடையாது.


கேள்வி:- உங்கள் முடிவு இந்த மாநிலத்தின் மரியாதையை பாதிக்காதா?


பதில்-: மாநிலத்தின் மரியாதை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நிலை எடுத்திருக்கிறோம்.


கேள்வி:- நாளைய தினம் உயர்நிலை செயற்திட்டக்குழு கூடுவதற்குள் சுமூகமான முடிவு ஏற்படுமென்று நம்புகிறீர்களா?


பதில்-: ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. ஏற்படக்கூடும்.


கேள்வி:- இவ்வாறு ஒப்புக்கொண்ட பிறகு, அந்தத் துறைகளை அகற்றியிருப்பது உங்களுக்கு வருத்தத்தைத் தருகிறதா?


பதில்: -வருத்தத்தை ஏற்படுத்தியதால்தான் இங்கே கூடியிருக்கிறோம்.கேள்வி:- இந்த பிரச்சினை காரணமாக மத்திய அரசில் நிலைத்த தன்மைக்கு பாதகம் ஏற்படுமா?


பதில்:- இது ஒன்றும் நிலைத்த தன்மையைப் பாதிக்காது. நாங்கள் என்ன, சிறிய கட்சிதானே. நாற்பது பேர் வெற்றிபெற்ற தமிழ் மாநிலத்திலிருந்து சென்றவர்கள். இந்த கூட்டணிக்கு விதையாக இருந்தவர்கள் நாங்கள். அதனால் விதையெல்லாம் மரமாக முடியுமா?


கேள்வி:- தமிழ்நாட்டிலிருந்து அரசியல் அனுபவம் இல்லாத இரண்டு பேர் கேபினட் அமைச்சர்களாகி விட்டார்களே என்ற கோபத்தின் காரணமாக அவர்கள் இப்படி செய்திருப்பார்களா?


பதில்:- யூகத்திற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.


கேள்வி:- நிதித்துறை காபினட் அமைச்சர் பொறுப்பையும், அதன் கீழுள்ள ரெவின்யூ துறையின் பொறுப்பையும் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பேரிடம் தரக்கூடாது என்பதற்காக இதைச் செய்திருப்பார்களோ?பதில்:- அதற்கும் முன் மாதிரி இருக்கிறதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணிசங்கர் அய்யருக்கு இப்போது பெட்ரோலியம் துறை கொடுக்கப்பட்டுள்ளது. அதே துறையின் ராஜாங்க அமைச்சராக தமிழ்நாட்டை சேர்ந்த .வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தந்திருக்கிறார்களே?


கேள்வி:- இந்த பிரச்சினை காரணமாக தி.மு..வின் ஆதரவு கேள்விக்குறியாகுமா?


பதில்:- இதற்காக தி.மு..வின் ஆதரவை விலக்கி கொள்கிற அளவிற்கு அவ்வளவு குறுகிய உள்ளம் எங்களுக்கு கிடையாது. முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர்கள் நாங்கள். அதற்காக உழைத்தவர்கள். தமிழ்நாட்டில் நாற்பது பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் அதிலே 90 சதவிகித உழைப்பு எங்களுடையது. 90 சதவிகித வியர்வை தி.மு.. தொண்டர்களுடையது. அப்படி இருக்கும்போது நீடிக்கக்கூடாது என்றோ நிலைக்ககூடாது என்றோ நாங்கள் கனவில்கூட கருதமாட்டோம்.


கேள்வி:- இந்த சிக்கல் தொடர்பாக சோனியா காந்தி உங்களோடு பேசினார்களா?


பதில்:- இது பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் உள்ள பிரச்சினை. சோனியாகாந்தி ஒரு கட்சியின் தலைவர். இதற்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது.


கேள்வி:- கூட்டணி அரசின் ஆரம்பத்திலேயே இப்படி ஒரு மோதல் ஏற்படுவது நல்லதென்று நினைக்கிறீர்களா?


பதில்:- ஒரு வகையில் நல்லது. யார் யார் குதர்க்கவாதிகள் என்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்வது நல்லதல்லவா?


கேள்வி:- உங்கள் கோரிக்கை எற்றுக்கொள்ளப்படாவிட்டால் உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?பதில்: -உங்களை கலந்து கொண்டு செய்கிறேன். (சிரிப்பு)


கேள்வி:- பிரதமர் பேசும்போது வேறு ஏதாவது துறைகளை இதற்கு மாற்றாக தருவதாக தெரிவித்தாரா?பதில்-: அப்படி ஒன்றும் சொல்லவில்லை.


கேள்வி:- பத்து நாட்களுக்குள் திரும்ப முடிவெடுப்போம் என்று பிரதமர் சொல்லியிருப்பதைப்போல் அதற்குள் முடிவு ஏற்படுமா?


பதில்:- பத்து நாட்களுக்குள் சரி செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கு பிரதமரிடம் நம்பிக்கை உண்டு. ஆனால் எட்டு நாட்கள் அமர்ந்து பேசி எடுக்கப்பட்ட முடிவு இப்படியாகிவிட்டதே என்ற அனுபவமும் உண்டு.


கேள்வி-: இந்த குழப்பங்களுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது காரணமாக இருப்பார்களா?


பதில்:- தெரியவில்லை.


கேள்வி:- குழப்பம் தீருகின்ற வரையில் கழக அமைச்சர்கள் அலுவலகம் செல்ல மாட்டார்களா?


பதில்:- இவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டால்தானே அலுவலகம் செல்லமுடியும். இந்த பிரச்சினை தீருகின்ற வரையில் அவர்கள் பொறுப்பேற்கமாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து அமைச்சரவையிலே இருப்பதும், இல்லாததும் பிரதமர் எடுக்கின்ற முடிவைப் பொறுத்திருக்கின்றது.


கேள்வி:- சமாதானம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?


பதில்:- அவர்கள் பேசினால் பேசுவோம்.


கேள்வி:- பத்து நாட்களுக்குள் பிரச்சினையை சரி செய்யாவிட்டால் அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிடுவீர்களா?


பதில்:- ஏன் நல்லதை நினையுங்களேன்.


கேள்வி-: பத்து நாட்கள் நேரம் இருக்கும்போது நாளைய தினம் அவசரமாக உயர்நிலை செயல்திட்டக் குழுவினை எதற்காக கூட்டுகிறீர்கள்?


பதில்:- உயர்நிலை செயல் திட்டக்குழு என்பது இந்த இயக்கத்தின் தலைமைக்குழு. மிகவும் முக்கியமானவர்கள் எல்லாம் அதிலே இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களுடைய யோசனைகளையும் கேட்கலாம் அல்லவா?


கேள்வி:- நாளைய தினம் டெல்லியில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு செல்கிறீர்களா?


பதில்:- நான் செல்லவில்லை.


கேள்வி:- இந்த பிரச்சினைகளையெல்லாம் பார்க்கும் போது நீங்கள் முதல் முதலில் எடுத்த முடிவான அமைச்சரவையிலே தி.மு.. சேருவதில்லை என்ற முடிவு நல்லதாக தெரிகிறதல்லவா?


பதில்:- அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் வலியுறுத்திவிட்டார்களே? திருமதி சோனியாகாந்தி, சுர்ஜீத், வி.பி.சிங், பரதன் ஆகிய தலைவர்கள் எல்லாம் வலியுறுத்தியதின் காரணமாக வேறு வழி இல்லாமல் இணக்கம் தெரிவிக்க வேண்டியதாயிற்று.கேள்வி-: உங்களிடம் ஏதாவது சமாதான திட்டம் இருக்கிறதா?


பதில்-: அதையெல்லாம் உங்களிடம் சொல்லமுடியாது. அவர்கள் வரும்போது பேசலாம்.


கேள்வி:- நாளைக்கு இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று எடுத்துக் கொள்ளலாமா?


பதில்-: தீர்க்கப்பட்டால் நல்லதுதான்.


கேள்வி:- எந்த இலாகாவை தர மறுக்கிறார்கள்?


பதில்:- அதுகுறித்து இரு தரப்பினரிடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அப்படியே படிக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெனார்த்தனரெட்டியும், தி.மு.. சார்பில் தலைவர் கருணாநிதியும் 14&-வது மக்களவையில் அமையும் அமைச்சரவையில் தி.மு..விற்கு என பேசி ஒப்புக்கொண்ட இலாகாக்களின் விவரம் வருமாறு-


கேபினட் அமைச்சர்கள் 3 பேர்


1. தரைவழி போக்குவரத்து (நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து) -டி.ஆர்.பாலு 2. தகவல் தொழில் நுட்பம், தொலைதொடர்பு -தயாநிதி மாறன்


3. சுற்றுச்சூழல், வனத்துறை - .ராஜாஇணை அமைச்சர்கள் 4 பேர்


1. நிதி -ரெவின்யூ -எஸ்.பழனிமாணிக்கம்


2. சட்டம்-கே.வேங்கடபதி


3. உள்துறை (பணியாளர், உள்நாட்டுப் பாதுகாப்பு) -எஸ்.ரகுபதி


4. சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் -சுப்புலட்சுமி ஜெகதீசன்
இவ்வாறு முடிவெடுத்து அதில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஜெனார்த்தனரெட்டியும், தி.மு.. சார்பாக பேசிய நானும் 21.-5.-2004 அன்று கையெழுத்திட்டுள்ளோம். நான் இது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் நேற்றைய தினம் (23.-5.-2004) சென்னை திரும்பிவிட்டேன். நேற்றிரவு டெல்லியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் எதிர்பாராத சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கப்பல் போக்குவரத்து விடப்பட்டிருக்கிறது. நிதித்துறையில் ரெவின்யூ துறை தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது விடப்பட்டிருக்கின்றது. நிதித்துறையில் ரெவின்யூ துறை முக்கியமான பிரிவாகும். அதைப்போலவே உள்துறையில் பணியாளர் பிரிவு தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டு விடப்பட்டுள்ளது. இதெல்லாம் முக்கியமான அம்சங்களாகும்.கேள்வி:- இருவருக்கும் இடையே சுமுகமான சூழ்நிலையில் பேச்சுவார்த்தையெல்லாம் நடைபெற்ற பிறகு இதையும் பேசித்தீர்த்திருக்கலாம் அல்லவா?


பதில்:- பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். நான் எட்டு நாட்கள் டெல்லியிலே எதற்காக தங்கியிருந்தேன். எட்டு நாள் இருந்து பேசி விவாதித்து எடுக்கப்பட்ட முடிவை நான் வந்தவுடன் சில பேர் மாற்றியிருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அப்படிப்பட்டவர்கள் சோனியா காந்தியையும், பிரதமரையும் சுற்றியிருப்பது நல்லதல்ல. இருவரையும் அந்த கும்பலிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பது என் எண்ணமாகும்.கேள்வி:- கும்பல் யார் என்று சொல்ல முடியுமா?பதில்:- அது ரகசியம்.


கேள்வி-: அதென்ன சிதம்பர ரகசியமா?


பதில்:- எனக்குத் தெரியாது. சிதம்பர ரகசியமோ, மாயவரம் ரகசியமோ? எனக்குத் தெரியாது.இப்படி முடிகிறது கருணாநிதி பேட்டிநிதித்துறை காபினட் அமைச்சர் பொறுப்பையும், அதன் கீழுள்ள ரெவின்யூ துறையின் பொறுப்பையும் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பேரிடம் தரக்கூடாது என்பதற்காக இப்படி செய்துவிட்டார்கள் என்றும் அதனால் அப்போது தி.மு.. கேட்ட துறைகளை தடுத்ததில் .சிதம்பரமும் மணிசங்கர் அய்யரும் காரணமாக இருந்தார்கள் என்றும் தி.மு..வுக்குள்ளேயே குமுறல்கள் கேட்டன. தனது பேட்டியிலும்இது சிதம்பர ரகசியமோ மாயவரம் ரகசியமோஎன்று பொடி வைத்தார் கருணாநிதி.


இப்படி ஆக்ரோஷமாக பேட்டிக்கொடுத்த பிறகு ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது. அதன்பிறகு ''கேட்ட துறை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது" 2004 மே 26- சென்னையில் இப்படி பேட்டியில் சொன்னார் கருணாநிதி. அப்போது அவர் அளித்த சந்தோஷ பேட்டியை படித்துவிடலாமே....


கேள்வி:- தற்போது சிக்கல் தீர்ந்துவிட்டது. உங்கள் அமைச்சர்கள் எப்போது பொறுப்பேற்கிறார்கள்?பதில்:- நாளைய தினம் (26.-5.-2004)


கேள்வி:- சிக்கலுக்கு யார் காரணம்?பதில்:- சிக்கல் என்று அந்த ஊருக்குப் பெயர் வைத்தவர்கள் தான் காரணம். (சிரிப்பு).

கேள்வி-: கப்பல் போக்குவரத்து துறையைக் கேட்டுப் பெற்றதால் தமிழகத்திற்கு நன்மை கிடைக்குமா?


பதில்:- குளச்சல் திட்டம், சேது சமுத்திரத்திட்டம் போன்றவைகளை இந்தத் துறையின் மூலம் செயலாக்கம் செய்ய முடியும். அதில் டி.ஆர்.பாலு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.


கேள்வி:- இப்படிப்பட்ட பிரச்சினைகள் வருகின்ற நேரத்தில் தீர்ப்பதற்காக வருங்காலத்தில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டால் உதவிகரமாக இருக்குமல்லவா? அப்படிப்பட்ட குழு அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்துவீர்களா?


பதில்:- வலியுறுத்தி, அதன் விளைவாக ஒரு குழுவினை இரண்டொரு நாட்களில் அமைக்கவிருக்கிறார்கள்.


கேள்வி-: அந்தக் குழுவிலே யார் யார் இடம்பெறுவார்கள்?


பதில்:- எல்லாக் கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிலே பிரதி நிதித்துவம் இருக்கும். கலந்து பேசி அதை முடிவெடுப்பார்கள்.


கேள்வி-: அந்தக் குழுவிற்கு நீங்கள் தலைமை ஏற்பீர்களா?


பதில்:- என்னுடைய நேரம் அதற்கு ஒத்து வராது.


கேள்வி:- பிரச்சினை தீர்ந்ததில் உங்களுக்கு திருப்திதானே? பதில்:- திருப்திதான்.


கேள்வி:- தங்கள் கட்சியின் நாடாளுமன்றக் குழு சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கை பற்றி?


பதில்:- அந்த அறிக்கையின் வாசகங்கள் வருமாறு-. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான திருமதி சோனியாகாந்தி அவர்களின் உரிய நேரத் தலையீட்டின் காரணமாக தி.மு.கழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேறியுள்ளன. மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் இன்று (25.-5.-2004) பிரதமரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது பிரதமர் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளவாறு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையுடன் கப்பல் போக்குவரத்துத்துறையும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுபோல எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தொழில் மற்றும் வர்த்தகத்துறைக்குப் பதிலாக நிதியமைச்சகத்தில் வருவாய்த் துறை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்


கேள்வி:- உங்களுக்கு முழு திருப்திதானே?


பதில்:- திருப்பித் திருப்பி இதே கேள்வியைக் கேட்கிறீர்கள். எனவே உங்கள் பாஷைபடி சொல்ல வேண்டுமேயானால், பூரண திருப்தி (சிரிப்பு)


கேள்வி:- ஏற்பட்ட குழப்பம் காரணமாக தி.மு.ழகத்தின் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதா?


பதில்:- இல்லை. இது ஒன்றும் குழப்பமில்லை. எனவே மதிப்புப் பாதிக்கப்பட எந்த வாய்ப்பும் இல்லை.


கேள்வி:- சோனியாகாந்தியையும், பிரதமரையும் சுற்றியிருந்த கும்பல் என்னவானார்கள்?


பதில்:- சில ஏடுகளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. நான் பொரி அகராதியையே எடுத்துப் பார்த்தேன். அந்த வார்த்தைக்கு அகராதியில் கூடியிருக்கின்ற தோழர்கள் என்றுதான் அர்த்தம் போட்டிருக்கிறார்கள்

சரி நாடகம் எல்லாம் முடிந்து ஐந்து ஆண்டுகள் போய்விட்டன. இப்போதும் அதே நாடகம் அரங்கேறி தன் வீட்டு பிள்ளைக்கு எப்படியோ பதவி வாங்கிவிட்டார்கள்.ரெவின்யூ துறை எல்லாம் முக்கியம் என்று போன முறை வாங்கியவர்கள் என்ன சாதித்தார்கள் என்று இப்போது சொல்ல முடியுமா? அந்த துறைகளை வாங்க சண்டித்தனம் மட்டுமே செய்ய முடியும் துறையில் சாதித்தது எல்லாம் வெளிச்சத்துக்கு வருமா என்ன. ஆண்டவனுக்குதான் வெளிச்சம்