வெள்ளி, 16 ஜனவரி, 2009

டாக்டர் பிரகாஷின் சிறைக்கதைகள் ‍ 2

நகைச்சுவை உணர்வு

ஒரு மல்டிநேஷனல் கம்பெனியில் அக்கவுண்ட்டன்டாக பணி பார்க்கும் உமேஷ் தலாய் 28 வயதான புத்திசாலியான ஸ்மார்ட்டான மனிதன். ஆனால் அவன் குணத்தில் எல்லாவற்றையும்விட முக்கியம் அவனுடைய நகைச்சுவை உணர்வு. சென்ஸ் ஆப் ஹியூமர்.

அவன் கதை கொஞ்சம் சோகமாகத்தான் இருந்தது. கஷ்டமான சூழ்நிலைகளிலும், கொடூரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கஷ்டங்களிலும் காமெடி தேடும் அந்த மனிதன், ஒவ்வொரு டிராஜடிக்குள்ளும் ஒரு ஜோக்கை கண்டுபிடித்தான். இதுதான் அவன் சொன்ன கதை. அவன் வார்த்தைகளிலேயே அவன் சொன்ன மாதிரி.

"டாக்டர் சார், நான் ஒரு அக்கவுன்டென்ட். எப்போதும் ரூபாயும் காசுகளையும் எடை பார்த்துக் கொண்டு இருந்த நான் இன்ச்சுகளையும், மில்லி மீட்டர்களையும் பற்றி யோசிக்க மறந்துவிட்டேன். சுமார் ஆறு மாதத்திற்கு முன் எனக்கு கல்யாணம் நடந்தது. என்னைப் போல் என் மனைவியும் ஒரிசாகாரிதான். அவள் ஒரு போலீஸ் அஸிஸ்டென்ட் கமிஷனரின் மகள்.
திருமண சமயத்தில் அவளுக்கு வயது 20. கல்யாணம் முடிந்து மனைவி என்னுடன் சென்னை வந்து விட்டாள். எங்கள் தாம்பத்ய வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் முதலில் சொன்ன மாதிரி வேலையில் ரொம்ப பிஸியாக இருந்த மாதிரி இன்ச்சுகளையும் மில்லி மீட்டர்களையும் கவனிக்காமல் இருந்து விட்டேன்.

எப்ப‌வும் மோனிகா லெவ‌ன்ஸ்கி மாதிரி சிரித்த‌ அவ‌ள் முக‌த்திற்கு கார‌ண‌ம். ஒரு நாள் ஆபிஸில் இருந்து சீக்கிர‌மா வீட்டுக்கு திரும்பி போன‌ப்போ என் க‌ண்ணால் பார்த்தேன். ப‌க்க‌த்து வீட்டில் வ‌சிக்கும் இன்ஜினிரிங் காலேஜில் ப‌டிக்கும் வாலிப‌ன் நிர்வாண‌மாக‌ என் பெட்ரூமில் என் ம‌னைவியுட‌ம் இருந்தான். அவ‌ன் இன்ச்சுக‌ளையும் மில்லி மீட்ட‌ர்க‌ளையும் த‌ன் உட‌லால் என் மனைவியை எடை போடுவ‌தைப் பார்த்து கொஞ்ச‌ம் ஷாக்காத்தான் இருந்த‌து. ஆனால் அந்த‌ க‌ண்கொள்ளா காட்சியை அங்கே நின்று இன்னும் கொஞ்ச‌ நேர‌ம் பார்ப்ப‌த‌ற்கு என‌க்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் அவ‌ர்க‌ள் இருவ‌ரும்தான் வெட்க‌ப்ப‌ட்டார்க‌ள்.

பெட்சீட்டால் த‌ன் உட‌ம்பை மூடிக்கொண்டு வெட்க‌ப்ப‌ட்டுக் கொண்டே என் ம‌னைவி பாத்ரூமூக்கு ஓடினாள். ஒரு கையில் ஜீன்ஸ் பேன்டையும் ம‌ற்றொரு கையில் சிக‌ப்பு க‌ல‌ர் ஜ‌ட்டியும் வைத்துக்கொண்டு இர‌ண்டாம் மாடி பால்க‌னியில் இருந்து கீழே குதித்த‌ வாலிப‌ன் இப்போது இன்ச்சுக‌ளிலும் மில்லி மீட்ட‌ர்க‌ளிலும் ரொம்ப‌வே சுருங்கியிருந்தான்.

குளித்து வ‌ந்த‌ பின் ம‌னைவியுட‌ன் பேசுவோம் என்று நானும் கிச்ச‌னுக்கு சென்றேன். ஒரு காப்பி போட‌ தொட‌ங்கினேன். ரொம்ப‌ நேர‌ம் க‌ழிந்தும் என் ம‌னைவி திரும்பி வ‌ர‌வில்லை. பாத்ரூம் ப‌க்க‌த்தில் போய் மெதுவாக‌ த‌ட்டிப் பார்த்தேன். க‌த‌வு உட்ப‌க்க‌ம் திற‌ந்துவிட்ட‌து. உள்ளே போய் பார்த்தால் வென்டிலேட்ட‌ர் ஜ‌ன்ன‌லில் இருந்து க‌ட்டிய‌ ஒரு க‌யிறில் என் ம‌னைவி தொங்கிக் கொண்டிருந்தாள்.

இப்போது என் ம‌னைவியின் க‌ழுத்து ப‌ல‌ இன்ச்சுக‌ள் நீண்டு ஒரு ஜிராபியின் க‌ழுத்து மாதிரி இருந்த‌து. எதாவ‌து தொட்டால் ஆப‌த்து என்று நேராக‌ போலீசுக்கு போன் செய்தேன். என் த‌ந்தை தாயாருக்கும் தொலைபேசியில் த‌க‌வ‌ல் சொன்னேன். அவ‌ள் த‌ந்தைக்கும் இந்த‌ விப‌த்து ப‌ற்றி போன் செய்தேன். ஆனால் ப‌க்க‌த்துவிட்டு வாலிப‌ன் நிர்வாண‌மாக‌ இர‌ண்டாம் மாடி பால்க‌னியில் இருந்து குதித்த‌தை சொல்ல‌வில்லை. என் ம‌னைவியின் த‌க‌ப்ப‌னார் ஒரு முர‌ட‌ன். த‌ன் பெண் த‌ற்கொலைக்கு மாப்பிள்ளைதான் கார‌ண‌ம் என்று தீர்மான‌ம் செய்து மெட்ராஸில் போலீஸ் ஆபிசில் வேலை செய்யும் ந‌ண்ப‌ருக்கு கூறி என் மேல் ஆக் ஷ‌ன் எடுக்க‌ சொன்னான். வ‌ர‌த‌ட்ச‌ணை வ‌ழ‌க்கில் கைது செய்ய‌ வ‌ந்த‌ காவ‌ல‌ர்க‌ள் ரொம்ப‌வே டீச‌ன்டாக‌த்தான் இருந்தார்க‌ள். டூத் பேஸ்ட், பிர‌ஷ், ட‌வ‌ல், ஜ‌ட்டி, லுங்கி, பெட்ஷீட், எல்லாம் ஒரு துணி பேக்கில் போட்டுக் கொண்டு சாய‌ங்கால‌ம் சுமார் ஏழே முக்கால் ம‌ணிக்கு என்னை நீதிப‌தியின் வீட்டுக்கு கூட்டிச்சென்றார்க‌ள். த‌டி க‌ண்ணாடியின் வ‌ழியே என்னைப் பார்த்துச் "ச‌ப்பாத்தியா? சோறா?" என்று நீதிப‌தி கேட்டார்.

"... தேங்க்ஸ் ஐயா, இர‌ண்டும் வேண்டாம் இப்போதுதான் இங்கே வ‌ருவ‌த‌ற்கு முன்பு ச‌ர‌வ‌ண‌ப‌வ‌னில் வ‌யிறு நிறைய‌ சாப்பிட்டு வ‌ருகிறேன்."

ஆஹா என்று காவ‌ல‌ர்க‌ளும் நீதிப‌தியும் சிரித்த‌ போதுதான் அவ‌ர் என்னைத் த‌ன் வீட்டில் சாப்பாட்டுக்கு அழைக்க‌வில்லை. சிறையில் என‌க்கு கிடைக்கும் ட‌ய‌ட்டை என் வார‌ண்டில் எழுதுவ‌த‌ற்குத்தான் அப்ப‌டி கேட்டு இருந்தார் என்று புரிந்த‌து.

நேராக‌ சிறையில் கொண்டு விட‌ப்ப‌ட்டேன். கேட்டில் இருந்து ஒரு காவ‌ல‌ர் என்னை இர‌ண்டாம் பிளாக்கில் கொண்டுவ‌ந்து விட்டார். கொசுக‌டியுட‌ன் எப்ப‌டியோ நைட்டு தாண்டிவிட்ட‌து. மறுநாள் பக‌லில் குளிக்கும் தொட்டி அருகில் சென்றேன். சிமெண்டு தொட்டியில் இருந்து அலுமினிய‌ம் குவ‌ளை வைத்து குளித்துக்கொண்டிருக்கும் சில‌ வாலிப‌ர்க‌ளுக்கு ந‌டுவில் நானும் நுழைந்து குளிக்க்க‌த் தொட‌ங்கினேன். அப்போது நான் போட்டிருந்த‌து சிங்க‌பூரில் இருந்து வாங்கிய‌ ஒரு பிங்க் ஜ‌ட்டி. குளித்து முடித்துவிட்டு போடுவ‌த‌ற்கு அதே டிசைனில் புளு க‌ல‌ரில் ஒரு ஜ‌ட்டி வைத்திருந்தேன். குளிக்கும் உப்புத் த‌ண்ணியில் கொஞ்ச‌ம் காவா நாற்ற‌ம் இருந்த‌தினால் குளித்து முடித்த‌ பின் உடம்பில் இருந்து வ‌ரும் நாற்ற‌ம் கொஞ்ச‌ம் அதிக‌ம்தான்.

ஆப்பிள் டவலை பிடித்துக்கொண்டு ஈர ஜட்டியை கழற்றி ஒரு பக்கம் வைத்தேன். புளு கலர் ஜட்டி போட்டுக்கொண்டு திரும்பி உடம்பை துடைக்கும் எண்ணத்தில் கொஞ்ச தூரத்தில் இன்னொரு வாலிபன் வந்தான். பெரிய முடி வைத்த காட்டானை மாதிரி கருத்த நிறத்துடன் இருக்கும் வாலிபனை எனக்கு தெரியாது. ஆனால் அவன் பக்கம் நான் பார்த்தற்கு காரணம் அவன் போட்டு இருந்த பிங்க் ஜட்டி என் ஜட்டி மாதிரி அதே டிசைனில் இருந்த சிங்கப்பூர் ஜட்டிதான்.

ஆயிரத்து ஐந்நூறு பேர் இருக்கும் இந்த சிறையில் இரண்டு பேர் ஒரே மாதிரி சிங்கப்பூர் ஜட்டி போடுவது கொஞ்சம் ஆச்சரியம்தான் என்று நினைத்துக்கொண்டு திரும்பி பார்த்தால் தொட்டி மேல் வைத்திருந்த என் ஜட்டியைக் காணவில்லை.

வீட்டில் மனைவியைத் தொலைத்தேன். சிறையில் ஜட்டியைத் தொலைத்தேன். வேறு என்னவெல்லாம் தொலைக்கப் போகிறேனோ?"

அவன் கதையைக் கேட்ட நான் அவனுக்கு கொடுத்த ஒரே ஆசிர்வாதம் "என்ன தொலைத்தாலும் உன் சென்ஸ் ஆப் ஹிமரை மட்டும் தொலைத்துவிடாதே"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக