திங்கள், 26 ஜனவரி, 2009

டாக்டர் பிரகாஷின் சிறைக்கதைகள் ‍ 3

புத்திசாலி வழக்கறிஞன்
சட்டம் ஒரு மீன் வலை மாதிரி. சின்ன சின்ன மீன்கள் ஓட்டைக்குள் புகுந்து தப்பி விடும். சுறா, திமிங்கலம் போன்ற பெரிய வகை மீன்கள் வலையைக் கிழித்து விடும். ஆனால் நடு சைஸ் மீன்கள் மட்டும் மாட்டிக்கொண்டு இறந்துவிடும். ஒரு பெரிய மீன் எப்படி வலையை கிழித்து சட்டத்தையே கிண்டல் செய்து ஓடிவரும் கதைதான் இது. இதுதான் புத்திசாலி வழக்கறிஞர் கதை.

அவர் ஒரு வழக்கறிஞர். ஹைகோர்ட் லா சேம்பரில் ஆபிசும் குரோம்பேட்டையில் வீடும் இருந்தது. வீட்டில் வசிக்கும் அவன் மனைவி, ஒரே பெண் சுதா. மருத்துவக்கல்லூரியில் கடைசி வருடம் படித்துக்கொண்டு இருக்கும் சுதாவுக்கு குரோம்பேட்டையில் இருந்து ஜி.எச்.சுக்கு தினமும் கொண்டு போய் கூட்டி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதுதான் ரஜினியின் ஆட்டோ. வழக்கம் போல் அந்த படித்த பணக்கார டாக்டர் பெண்ணிற்கு படிக்காத ஆட்டோ பையன் மேல் காதல் வந்தது.

அந்த காதல் வெற்றி பெற்று இருவரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் சம்பவங்கள் தமிழ்படத்தில் வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் நடக்கும் விஷயங்களே வேறு. "சட்டப் பிரகாரம் நான் ஒரு மேஜர். நாட்டு ஜனாதிபதியோ, ஆட்டோ டிரைவரோ அது என் விருப்பம். ஆசிர்வாதம் கிடைக்குதோ இல்லையோ கல்யாணம் நடக்கும்."

அவன், பெண் இப்படி சொன்னப்போ சட்டம் தெரிந்த வழக்கறிஞருக்கு வேறு ஒரு விஷயம் தெரியவில்லை. அந்த சமயம் ஒரு கொலை வழக்கில் சிக்கி வியாசர்பாடியில் வசிக்கும் நாலு வாலிபர்களுக்கு வழக்கறிஞராக இருந்தான். 18 மற்றும் 22 வயதில் இருக்கும் இந்த மாதிரி வாலிபர்கள் ஒரு விதவை வீட்டில் நுழைந்து அவள் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவள் வீட்டில் இருந்த பணத்தையும் நகையும் எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்கள். ஐநூறு ரூபாய் பணம், ஆறாயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்துக்காக கொலை செய்தவர்கள் கொஞ்சம் ஜாஸ்தி பணம் கொடுத்தால் இன்னொரு கொலையைய ஏன் செய்ய மாட்டார்கள்?

அந்த‌ நான்கு வாலிப‌ர்க‌ளையும் த‌ன் ஆபிசுக்கு கூப்பிட்டு இருப‌தாயிர‌ம் விலை பேசி அதில் ப‌த்தாயிர‌ம் அட்வான்ஸ் கொடுத்து அந்த‌ ஆட்டோ டிரைவ‌ர் ர‌ஜினியை தீர்த்துக்க‌ட்ட‌ சொன்னான். அவ‌னே கொலை செய்யும் பிளானையும் சொல்லிக் கொடுத்தான். ச‌ட்ட‌ம் அவ‌னுக்கு தெரியும். அவ‌ன் சொன்ன‌ பிளான் மாதிரியே ஆட்டோவில் ஏறி அந்த‌ வாலிப‌ர்க‌ள் ர‌ஜினியை த‌னி இட‌த்துக்கு கொண்டு சென்று ர‌ஜினியின் க‌ழுத்தை அறுத்து கொன்று விட்டு உட‌ம்பை புதைத்துவிட்டார்க‌ள். அந்த‌ ஆட்டோவை வ‌ழ‌க்க‌ம் போல் விடும் ஸ்டாண்டில் விடாம‌ல் பார்ட‌ர் தோட்ட‌த்தில் இருக்கும் ஒரு காய‌லான் க‌டையில் திருட்டு ஆட்டோ என்று விற்று விட்டார்க‌ள். இந்த‌ ஆட்டோதான் குற்றவாளியை பிடிப்ப‌த‌ற்கு கார‌ண‌மாக‌ இருந்த‌து.

பிர‌ச்னைக‌ளை எல்லாம் துவக்கியது சுதாதான். ச‌ட‌னாக‌ ர‌ஜினியை காண‌வில்லை. மோனிக்கா லெவ‌ன்ஸ்கி டேபிளின் அடியில் இருக்கும் போது பில் கிளின்ட‌னின் முக‌த்தில் இருக்கும் சிரிப்பு மாதிரி சிரித்துகொண்டே இருக்கும் த‌ன் த‌ந்தையை பார்த்து சுதாவிற்கு ச‌ந்தேக‌ம் வ‌ந்துவிட்ட‌து. சுதா ஒரு ப‌டித்த‌ பெண். த‌ன் பாய் பிரெண்ட் காணாம‌ல் போன‌த‌ற்காக‌ ஒரு பெட்டிச‌ன் எழுதி த‌ன் த‌ந்தை மேல் ச‌ந்தேக‌த்தை சும‌த்தி போலீஸ் க‌மிஷ‌ன‌ருக்கு புகார் செய்தார். க‌மிஷ‌ன‌ர் ஆபிஸில் இருந்து குரோம்பேட்டை போலீஸ் ஸ்டேஷ‌னுக்கு ஒரு மெமோ போய்விட்ட‌து.

காய‌லான் க‌டையில் அக்கு வேறு ஆணி வேறாக‌ பிரித்து விற்ப‌னைக்கு வைத்த‌ ஆட்டோவை ஓட்டின‌ வாலிப‌ன் அதை ஒரு போலீஸ் ஜீப்பில் மோதி விட்டான். அந்த‌ ஆட்டோவைத்தான் போலீஸ்கார‌ர்க‌ள் தேடிக்கொண்டு இரு‌ந்தார்கள். காய‌லான் க‌டைக்கார‌னை இர‌ண்டு அடி அடித்த‌வுட‌ன் அவ‌ன் எப்.எம். ரேடியோ மாதிரி நிற்காம‌ல் எல்லாம் பாடிவிட்டான். ஒவ்வொருவ‌ராக‌ அந்த‌ நாலு பேரும் பிடிப‌ட்டார்க‌ள். வ‌வ்வால் தொங்க‌லும், ப‌ஞ்சாப் க‌ட்டும் க‌ட்டிய‌ பிற‌கு அவ‌ர்க‌ளும் வாய் திற‌ந்து பேரை சொல்லி விட்டார்க‌ள்.

ப‌ச‌ங்க‌ளுக்கு ஜாமீன் கேட்டு போஸீஸ் ஸ்டேஷ‌னுக்கு போன‌ ந‌ம்மாளை கோழி அமுங்குவ‌து மாதிரி அமுங்கி விட்டார்க‌ள். ஒரு பிர‌ப‌ல‌மான‌ வ‌க்கீல், ப‌ண‌க்கார‌ மாம‌னார், டாக்ட‌ர் பெண், ஒரு அப்பாவி ஆட்டோகார பைய‌ன், அதுக்கு மேல் அவ‌னுக்கு வைத்த‌ பெய‌ர் ர‌ஜினி, ம‌ஞ்ச‌ ப‌த்திரிகைக‌ளுக்கு வேறு என்ன‌ வேண்டும்.

"வ‌ழ‌க்க‌றிஞ‌ராக‌ இருந்தால் என்ன‌? நியாய‌ம் எல்லோருக்கும் ச‌ம‌ம்தான். 90 நாட்க‌ள் குற்ற‌ப்ப‌த்திரிகை தாக்க‌ல் செய்து வ‌ழ‌க்கை விரைவு நீதிம‌ன்ற‌த்துக்கு மாற்றி வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ராதாகிருஷ்ண‌னுக்கு ஜாமீன் கொடுக்காம‌ல் வ‌ழ‌க்கை முடித்துவிடுவோம்" என்று அஸிஸ்டென்ட் க‌மிஷ‌னர், ப‌த்திரிகையில் கூறினார். ராதாகிருஷ்ண‌னும் அந்த‌ நாலு ப‌ச‌ங்க‌ளும் சிறையில் த‌ங்கியிருந்த‌ போது 83வ‌து நாள் அதில் இருந்த‌ ஒரு வாலிப‌ன் அப்ரூவராக‌ மாறுவ‌த‌ற்கு விருப்ப‌ம் காட்டினான். காவ‌ல‌ர்க‌ள் ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம் ஆகி விட்டார்க‌ள். ஆனால் கூட‌ இருக்கும் ஒருத்த‌ன் இந்த‌ மாதிரி சாட்சி சொன்னால் ராதாகிருஷ்ண‌னுக்கு ஆயுள் த‌ண்ட‌னை நிச்ச‌ய‌ம்தான்.

ஆனால் ஒருத்த‌ன் அப்ரூவ‌ர் ஆன‌பின் வேலைக‌ள் அதிக‌மாக‌ இருக்கும். அவ‌னை நீதிப‌தியிட‌ம் ஆஜ‌ர் செய்ய‌னும். 164 ஸ்டேட்மென்டில் ரெக்கார்டு செய்ய‌னும். இந்த‌ வேலைக‌ளுக்கு எல்லாம் கொஞ்ச‌ நாள் ஆக‌லாம். அத‌னால் காவ‌ல‌ர்க‌ளால் 90வ‌து நாள் குற்ற‌ப‌த்திரிகை தாக்க‌ல் செய்ய‌ முடியவில்லை.

ச‌ட்டப்பிர‌கார‌ம் 90 நாளில் குற்ற‌ப்ப‌த்திரிகை நீதிம‌ன்ற‌த்தில் தாக்க‌ல் செய்யாவிட்டால் குற்றம் சும‌த்திய‌வ‌ருக்கு பெயில் அவ‌சிய‌ம் கொடுக்க‌ வேண்டும். அந்த‌ ப‌ச‌ங்க‌ளுக்கும் பெயில் கிடைத்துவிட்ட‌து. வெளியில் வ‌ந்த‌ பிற‌கு அந்த‌ வாலிப‌ன் த‌ன் ம‌ன‌சை மாற்றி "இப்போது நான் அப்ரூவ‌ர் ஆக‌மாட்டேன்" என்று சொல்லிவிட்டான்.

செஷ‌ன்ஸ் கோர்ட்டுக்கு வ‌ழ‌க்கு விசார‌ணைக்கு வ‌ந்து சாட்சி எல்லோரும் ஏறி வ‌ழ‌க்கை முடித்து தீர்ப்பு வ‌ழ‌ங்குவ‌து இப்போது இப்போதைக்கு ந‌ட‌க்காது.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Nice written up.
kumar

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

உண்மையாகவே நடந்த கதைதான்..

நான் பத்திரிகைகளில் சம்பவம் நடந்தபோதே படித்தேன்..

கருத்துரையிடுக