செவ்வாய், 6 ஜனவரி, 2009

டாக்டர் பிரகாஷின் சிறைக் கதைகள் ‍1


டாக்டர் பிரகாஷ்...
இந்தப் பெயரைக் கேட்டதுமே ஆபாசப் படம் எடுத்தவர், அதை இன்டர்நெட்டில் போட்டு சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் கைதானவர், கடந்த எட்டு ஆண்டுகளாகப் புழல் சிறையில் அடைபட்டு எப்போது விடுதலை என்று தெரியாமல் காத்திருப்பவர்... இது போன்ற பிம்பங்கள்தான் உங்கள் மனதில் எழும்பும்.

ஆனால் இவர் ஒரு எழுத்தாளர் என்பது உங்களுக்குத் தெரியுமோ? இவர் எழுதிய என்கவுன்டர் என்கிற நாவல் அயல்நாட்டுப் பதிப்பகம் ஒன்றால் வெளியிடப்பட்டு, இன்னமும் ராயல்டியைக் குவித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நடந்த புகழ்பெற்ற என்கவுன்டர் படுகொலைகளை நாவல் வடிவில் சித்தரிக்கும் இந்த நூலை தமிழிலும் கொண்டுவர இருக்கிறார். மகாபாரத கதையை மார்டன் மகாபாரதமாக இன்றைய அறிவியல் உலகத்தோடு பினைத்து ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதியிருக்கிறார். பத்திரிகையாளன் என்கிற முறையில் டாக்டர் பிரகாஷை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவரிடம் பேட்டிகளை எடுத்திருக்கிறேன். அப்போது அவருக்குள் இருந்த எழுத்தாற்றலை பார்த்து வியந்து போயிருக்கிறேன். சிறையில் நிறைய கதைகள் கிடைத்தால் யார்தான் எழுதமாட்டார்கள் என்று கேள்வி எழலாம்.

தமிழ் எழுதப்படிக்க தெரியாத இவர் ஜெயிலுக்குச் சென்றபிறகு தமிழிலும் எழுத ஆரம்பித்ததுதான் ஆச்சரியம். இன்னும் சொல்லப்போனால் சிறைக்கு போவதற்கு முன்பு அவர் எதையும் எழுதியது கிடையாது. ஆங்கிலத்தில் மட்டும் இவரே எழுதிவிடுவார். சாரி... தட்டச்சு செய்துவிடுவார் (பேப்பரில் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருந்தவர் கோர்ட் உத்தரவின்படி இப்போது லேப் டாப்பில் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்) தமிழில் எழுத வராது என்பதால் இவர் சொல்ல சொல்ல சக கைதிகள் எழுதித் தள்ளினார்கள். சிறையில் அவருக்கு இருக்கும் பொழுது போக்கே கதைகள் எழுதுவதுதான். தினமும் கதைகளை எழுதி தள்ளிக்கொண்டே இருக்கிறார். சுமார் 30 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதி தள்ளியிருக்கும் பிரகாஷ் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில்தான் எழுதினார். தமிழில் எழுதினால் புரியுமே என்று சக கைதிகள் கேட்டதால் தமிழில் எழுத ஆரம்பித்தார்.

ஜெயிலில் தான் சந்தித்த மனிதர்கள், அவர்களின் குண விசேஷங்கள், துரோகம், குரூரம், கொலைவெறி, சோரம் போதல்... என்று விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை குருதியும் நிணமும் நம் முகத்தில் தெறிக்கும் வகையில் சரளமாக எழுதிச் செல்கிறார். நவீன இலக்கியத்தில் தொடர்ந்த வாசிப்பனுபவம் உள்ள ஒரு வாசகன், இதில் வித்தியாசமான ஓர் உலகம் தன்னையறியாமல் கட்டமைவதைக் கண்டடைய முடியும். இதுவரை நாம் சந்தித்தறியத மனிதர்கள், அவர்களின் வித விதமான துக்கங்கள்...
போதும்...
படித்துப் பாருங்கள்.
என்ன கருத்தாக இருந்தாலும் எழுதுங்கள்.

டாக்டர் பிரகாஷின் சிறைக் கதைகள்
கழுத்தில்லாத மனிதன்

சிறை கக்கூஸ்களுக்கு கதவில்லை. கைதி உள்ளே போய் அதை லாக் செய்து கொண்டு எதாவது கலாட்டா செய்தால் பிரச்னை வராதா? தன் முன் ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டை வைத்துதான் சிறைவாசிகள் தன் மானத்தையும் விரைகளையும் காப்பாத்துவார்கள்.

தகரத்தில் செய்த ஒரு பாதி கதவுதான். அது சுமார் இரண்டரை அடி அகலமும் நான்கு அடி நீட்டும் இருக்கும். இதுதான் சிறையில் இருக்கும் கதவுள்ள ஒரே டாய்லெட். இந்த டாய்லெட் இருக்கும் தொகுதிதான் 3ஏ. இதில் வசிப்பவர்கள் ஸ்பெஷல் கிளாஸ் சிறைவாசிகள்.

தப்பா நினைக்காதீர்கள். இந்த ஸ்பெஷல் கிளாஸ் சிறைவாசி ஸ்பெஷலான மனிதன் ஒன்றும் இல்லை. அவனுக்கு இறக்கைகளோ, தலையில் கொம்போ, கால் நடுவில் வாலோ இல்லை. ஆனால் கைது செய்யும் முன் வெளியே வசதியாக இருந்து இன்கம்டாக்ஸ் வரி கட்டியதினால் இவர்களுக்கு கூட கொஞ்சம் வசதி கொடுக்கப்படும். எனக்கும் கொடுக்கப்பட்ட தொகுதி அதுதான். என்னுடன் அங்கு வசிக்கும் இன்னும் மூன்று சிறைவாசிகள்தான் ஒரு டாக்டர், ஒரு தொழில் அதிபர், மற்றும் ஒரு வங்கி மேனேஜர்.

இந்த‌ பிளாக்கில் மூன்று அறைக‌ள். இந்த‌ நாலு பேருக்கும் எட‌மோ எட‌ந்தான். இவ்ளோ எட‌த்தில் சாதா கைதிக‌ள் எப்ப‌டியும் 50 பேரை அடைத்து வைக்க‌லாம்.ஏ கிளாஸ் ஆனாலும் க‌ட்டில், ஏ.ஸி, பேன் மாதிரி வசதிகள் இல்லை. ஆனால் டேபிள், சேர், டெலிவிஷன் மற்றும் பெட்டுகள் இருக்கும்.
கடைசி ரூமை பெட்ரூமாக ஆக்கி நாலு மூலையிலும் நாலு பெட்களை வைத்துவிட்டோம். நடு ரூம்தான் டி.வி. ரூம். முன்னாடி ரூம்தான் டேபிள் சேர் வைத்து உட்காரும், பேப்பர் படிக்கும், செஸ் விளையாடும் இடம். எல்லாம் ஸ்மூத்தாக போய்க்கொண்டு இருந்தப்போ அங்கு ஒரு கைகலப்பு ஏற்பட்டது. அந்த கைகலப்பை கொண்டு வந்தவர்தான் இந்த கதையின் கதாநாயகன் சல்மான்கான்.

ஏ கிளாஸ் பிளாக்கில் 5வது சிறைவாசியா வந்த இந்த சல்மான்கான் பெரம்பூரில் ஏ1 பீப் ஸ்டாலின் முதலாளி. குட்டையாக சுமார் ஐந்தரை அடி உயரம். உருளைக் கிழங்கு அடைத்த சாக்கு மூட்டை மாதிரி ஒரு கொச கொசனு உடம்பு. அதிகம் காத்து அடித்த புட்பால் மாதிரி ஒரு ரவுண்டான மூஞ்சி. தலைக்கும் உடம்புக்கும் நடுவில் கழுத்தே இல்லை. எங்கு சாக்கு மூட்டை தொடங்கியது, எங்கு புட்பால் தொடங்கியது என்று சொல்வது கஷ்டம்தான்.

இடது கையில் ஒரு பெரிய கட்டைப் பை, வலது கையில் ஒரு பிஸ்லெரி தண்ணி கேன். அவன் பின்னால் இரண்டு அடியாள் பசங்க. ஒருவனின் தலை மேல் சுருட்டிய ஒரு பெட்டு, இன்னொருத்தனின் கையில் பிளாஸ்டிக் ப‌க்கெட், குட‌ங்க‌ள், இர‌ண்டு பிளேட், ஒரு த‌லகானி ம‌ற்றும் ஒரு தெர்மாஸ் பிளாஸ்க் இருந்தது.

ச‌ல்மான்கானை பார்த்தால் அவ‌ன் சிறைக்கு வ‌ரும் ம‌னித‌ன் மாதிரி தோன்ற‌வில்லை. ஏதோ பிக்னிக் வ‌ரும் ம‌னித‌ன் போல் தோன்றிய‌து. முத‌ல் நாள் ஆன‌தினால் கேஸ் என்ன‌ என்று கேட்க‌வில்லை. அத‌ற்குதான் நிறைய‌ நாட்க‌ள் இருக்கிற‌தே. அவ‌ன் பொட்டியும் ப‌டுக்கையும் பார்த்தால் சில‌ நாட்க‌ள் இல்லை சில‌ மாச‌ங்க‌ள் த‌ங்குவ‌து மாதிரி தோன்றிய‌து.

என்னிட‌ம் "பெட்டை எங்கு போட‌ணும்"னு கேட்டான். முட்டாள் மாதிரி க‌டைசி பெட்ரூமில் இருக்கும் இட‌த்தை காட்டிவிட்டேன். முத‌லில் டைம‌ன் நாலா இருந்த‌ அறை இப்போ டைம‌ன் ஐந்தாகிவிட்ட‌து. அவ‌ன் ஒரு சைல‌ன்ட் ஆன‌ ம‌னித‌ன். க‌ண்ணில் ஏதோ பிராப்ள‌ம் போல் இருந்த‌து. டி.வி.யில் இருந்‌து சுமார் ஒன்ன‌றை இன்ச் தூர‌ம் முக‌த்தை வைத்துக்கொண்டு தூர்த‌ர்ச‌ன் நியூஸை கொஞ்ச‌ம்கூட‌ விடாம‌ல் ஒன்ப‌த‌ரை வ‌ரைக்கும் பார்த்துக் கொண்டு இருந்தான். ந‌ல்ல‌ கால‌ம் அவ‌னுக்கு மூக்கு நீள‌மா இல்லை. இருந்திருந்தால் டி.வி. ஸ்கீரீன் மேல் உர‌சி இருக்கும்.

சிறையில் ரோல் கால் பையிலுக்காக‌ ஆறு ம‌ணிக்கே எழுப்பி விடுவ‌து ச‌க‌ஜ‌ம்தான். அத‌னால் எல்லோரும் ஒன்ப‌த‌ரை ப‌த்து ம‌ணிக்கு தூங்கி விடுவார்க‌ள்.

ப‌த்த‌ரை ம‌ணிக்கு முழித்து விட்டு நான் அதிர்ச்சி அடைந்து உட்கார்ந்துவிட்டேன். இல்லை. ம‌ணி ப‌த்த‌ரையில்லை. ச‌ரியான‌ ம‌ணி 10.33 இதை நான் பூக‌ம்ப‌த்தில் குளித்துக்கொண்டு இருக்கும் சுவ‌ர் மேல் மாட்டி இருக்கும் க‌டிகார‌த்தில் பார்த்தேன். வைப‌ரேச‌னால் அந்த‌ முட்க‌ள் ஆடிக் கொண்டு இருந்தாலும் டைம் க‌ரெக்ட் ஆக‌ காட்டிக் கொண்டு இருந்த‌து. ஏதோ பூக‌ம்ப‌ம் வ‌ர‌ப் போகிற‌து என்று ப‌ய‌ந்து விட்டேன்.

அந்த‌ ச‌த்த‌ம் ம‌றுப‌டியும் வ‌ந்த‌து. ம‌லைக்குள் நீண்ட‌ குகைக்குள் இருந்து ஸ்பீடாக‌ வெளியே வ‌ரும் ஒரு ஸ்டீம் இன்ஜினைப் போல் அந்த‌ ச‌த்த‌ம் நடு பெட்டில் ப‌டுத்து இருந்த‌ ச‌ல்மான்கானின் பாதி திற‌ந்த‌ வாய்க்குள் இருந்துதான் வ‌ந்து கொண்டு இருந்த‌து.

ப‌ன்னி க‌த்த‌ற‌ மாதிரி ஒரு ச‌த்த‌ம். அப்புற‌ம் செக‌ன்டு வேர்ல்ட் வார் பிளேன் மாதிரி இன்னொரு ச‌த்த‌ம். சல்மான்கானின் மார்பு உத‌றிக் கொண்டு இருந்த‌து. இந்த‌ மாதிரி ஜோரான‌ குற‌ட்டைக‌ளை நான் என் வாழ்க்கையில் கேட்ட‌து இல்லை. கொஞ்ச‌ நேர‌த்தில் பாக்கி தொகுதிவாசிக‌ளும் அவ‌ர‌வ‌ர் பெட்டில் எழுந்து உட்கார்ந்துவிட்டார்க‌ள். இந்த‌ ச‌த்த‌த்தில் யாரால‌யும் தூங்க‌ முடியுமா என்று ச‌ந்தேக‌ம்தான். அவ‌னை எழுப்ப‌ற‌த்துக்கு எங்க‌ள் எல்லோருக்கும் ச‌ங்கோஜ‌ம். பாக்கி மூன்று பேரும் என்னை உற்று உற்று பார்த்தார்க‌ள். க‌ண்ணால் பேசினார்க‌ள்.

"..... டாக்ட‌ர் ம‌டையா. நீதானே இவ‌னை இங்கே ப‌டுக்க‌ வைத்தாய். நியே அவ‌னை எழுப்பி விடு" எங்க‌ள் ச‌ங்கோஜ‌ம் எல்லாம் 12 ம‌ணி வ‌ரைதான். பின்ன‌ அவ‌னிட‌ம் போய் மெதுவாக‌ த‌ட்டி எழுப்பினேன். எழுப்பிய‌ கார‌ண‌த்தை சொன்ன‌போது த‌லையாட்டிக்கொண்டே பெட்டை சுருட்டிக் கொண்டு அவ‌ன் ந‌டு ரூமுக்கு சென்றான். அரை ம‌ணிக்குள் ம‌றுப‌டியும் ஆர‌ம்ப‌ம் ஆகிவிட்ட‌து அந்த‌ பூக‌ம்ப‌ம். இன்னும் ஒரு த‌ட‌வை எழுப்பி அவ‌னை முத‌ல் ரூமுக்கு அனுப்பிவிட்டோம். ம‌றுநாள் இவ‌னை வேறு எதாவ‌து இட‌த்துக்கு அனுப்பினால்தான் நாம் நிம்ம‌தியாக‌ தூங்க‌ முடியும் என்று நாங்க‌ள் சேர்ந்து முடிவு செய்தோம்.

ஆனால் ம‌றுநாள் எங்க‌ள் முடிவில் ஒரு சின்ன‌ மாற்ற‌ம். அப்போதுதான் ச‌ல்மான்கானின் வழ‌க்கை ப‌ற்றி தெரிய‌ வ‌ந்த‌து. கொஞ்ச‌ மாத‌த்திற்கு முன்பு அவ‌ன் இர‌ண்டாவ‌து த‌ட‌வை திரும‌ண‌ம் செய்தான். இர‌வெல்லாம் அவ‌ன் குற‌ட்டை ச‌த்த‌ம் அவ‌ன் புது ம‌னைவிக்கு தாங்க‌ முடிய‌வில்லை. தின‌மும் ச‌ண்டைதான். கோப‌த்தில் க‌சாப்பு க‌டை க‌த்தியால் த‌ன் ம‌னைவியின் க‌ழுத்தை வெட்டி சிறைக்குள் வ‌ந்த‌வ‌ன்தான் அந்த‌ ச‌ல்மான்கான்.

ஆச்ச‌ரிய‌ம் ஒன்றும் இல்லை. அடுத்த‌ நாள் உள் பெட்ரூமில் ச‌ல்மான்கானின் ப‌டுக்கை. பாக்கி நாங்க‌ள் எல்லோரும் வெளி ரூமீல்.

அடுத்த சிறை கதை "நகைச்சுவை உணர்வு" விரைவில்...

1 கருத்து:

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

கதை அந்தச் சூழலைச் சொல்வதால் ரசிக்கத்தக்கதாக உள்ளது..

அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் கேட்டதாகச் சொல்லவும்.))))))))))))))))))

கருத்துரையிடுக